‘ஈரோஸ்’ புதிய செயலாளராக ஆறுமுகம் ஜெயக்குமார்

0
672

eros-aஈரோஸ்எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி புதிய உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கியுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ஆறுமுகம் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (27) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்போது புதிய செயலாளராக என்னை நியமித்ததையடுத்து, கட்சியின் செயற்பாட்டை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கட்சியின் செயலாளராக இருந்த நபர், நிதிமோசடியில் ஈடுபட்டதுடன், கட்சி உறுப்பினர்களை மதிக்காமை, தன்னிச்சையாக செயற்பட்டமை மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை போன்ற காரணங்களினால் அவர் செயலாளர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் நீக்கப்பட்டுள்ளார்.

எதிர் காலத்தில் இக்கட்சியின் செயற்பாடு சகல உறுப்பினர்களின் ஆலோசனையுடனும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்

இதன் முதல் நடவடிக்கையாக எதிர் வரும் மே முதலாம் திகதி, எமது கட்சியின் மேதினக் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் செயற்பாட்டை விஸ்தரிக்கவுள்ளோம்

அத்துடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் நலன் போன்றவற்றிலும் எமது கட்சி கரிசனையுடன் பல்வேறு திட்டங்களையும் முன் வைத்துள்ளதுஎன்றார்..

 Thanks

எம்.எஸ்.எம்.நூர்தீன்

Tamil mirror