கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டம்

0
428

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என கோரி கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

02

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள உறவுகள் குறித்து உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில்  முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண மாவட்ட நகரங்களான வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள் மூடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன.

 

03