முதலமைச்சர் ஓர் உயிரற்ற சடப்பொருள்

0
553
கா –
கிழக்குமாகாண முதலமைச்சருடனான நேற்றைய சந்திப்பு பலனற்றது.திருப்பதியில்லை.அவரில் எள்ளவும் நம்பிக்கையில்லை. அவர் ஓர் சடப்பொருள்.அவர்சார்ந்த அமைச்சர்களும் அப்படியே. எனவே நாம் இனி மாகாணஅரசை நம்பப்போவதில்லை. மத்தியஅரசுதான் எமக்கு உரிய பதிலளிக்கவேண்டும்..
இவ்வாறு நேற்று புதன்கிழமை காரைதீவில் 59ஆவது நாளாக சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
நாளைய (இன்றைய) வடக்கு கிழக்கு தழுவிய முழு ஙர்த்தாலுக்கு எமது பட்டதாரிகள் மனப்பூர்வமான பூரண ஆதரவைத் தெரிவிப்பதாகக்கூறும்  சங்கத்தின் தலைவர் ஜெசீர் மேலும் தெரிவிக்கையில்:
பெரும்பாலான பட்டதாரிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலை போராட்டத்திற்குச்சென்று நேற்று புதன்கிழமை மீண்டும் போராட்டத்திற்கத்திருமிபியிருந்தனர்.
தலைவர் ஜெசீர் மேலும் கருத்துரைக்கையில்:
எமது போராட்டம் இன்று 59வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணசபையை முடக்கி எமது கோரிக்கையை வலுப்படுத்தச் சென்றிருந்தோம்..
அங்கு முதலமைச்சர் எம்மைச்சந்திப்பதற்கு தயங்கியவராகக் காணப்பட்டார்.
ஏலவே அவர் எம்மிடம் இருவாரகால அவகாசம் கேட்டிருந்தார். நாம் இரு மாத கால அவகாசம்கொடுத்துவிட்டே நேற்று சென்றிருந்தோம்.
ஆனால் கிழக்குமாகாணசபை முதலைச்சரோ அமைச்சர்களோ நேற்று  எம்மிடம் எவ்வித வாக்குறுதிகளையோ உத்தரவாதத்தினையோ தரவில்லை.
ஆனால் முதலசை;சர் தமது முகநூலிலும் இணையத்தளத்திலும் பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கப்போவதாக பம்மாத்துக்காட்டிக்கொண்டிக்கிறார். அவரது இப்பொய்யான பதிவுகளுக்கு நாம் எமது சங்கத்தின் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
மக்களால் தெரிவுசெயய்யப்பட்ட எமது மாகாணசபை படித்த எமக்கு வேலை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லையாயின் இன்னும் அது தேவையா? எனவே கலைத்துவிட்டு வாருங்கள். தேர்தலில் சந்திப்போம்.அப்போது தெரியும் எமது பட்டதாரிகளின் பலத்தை.
பெறுமதியில்லாத ஒரு முதலமைச்சரைக்கொண்டிருப்பதையிட்டு நாம் வெட்கப்படுகின்றோம். வேதனைப்படுகின்றோம்.அவர் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதாயில்லை. அமைச்சர்களும்அவர் வழியே. எனவே நாம் இவர்களை நம்பவில்லை.
மத்தியஅரசு எமக்கு விரைவாக வழிகாட்டவேண்டும்.தீர்வு தரவேண்டும்.
மேலும் நாளை (இன்று) இங்குவருவதா இல்லையா என்பது பற்றி சற்றுநேரத்தில் தீர்மானிப்போம்.நாம் பூரணஆதரவைத்தெரிவிக்கின்றோம். என்றார்.
நாம் எமது பட்டத்திற்கான அரச தொழிலையே கேட்கின்றோம்.
அந்தந்த வருடங்களில் பட்டதாரிகள் வெளியேறுகின்றபோது தொழிலை வழங்கினால் இவ்வாறானதொரு பாரிய பிரச்சினை எழுந்திருக்காது. எங்களுக்கான தொழில் கிடைக்கும்வரை எமது சாத்வீகப்போராட்டம் தொடரும் என்றார்.