மட்டு – அம்பாறை மாவட்டங்களின் கடற்கரைப் பிரதேசங்களில் சமீப காலமாக பாலியல் துர்நடத்தைச் சம்பவங்கள்

0
2158

( செ.துஜியந்தன்

மட்டு – அம்பாறை ஆகிய மாவட்டங்களின் கடற்கரைப் பிரதேசங்களில் சமீப காலமாக பாலியல் துர்நடத்தைச் சம்பவங்கள் இடம் பெற்றுவருகின்றன. இதன் காரணமாக கலாசார சீரழிவும் ஏற்பட்டுவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்று (26) கடற்கரைப் பிரதேசங்கள் சிலவற்றை அவதானித்த போது அங்கு அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதற்கான தடயங்களும் கிடைக்கப்பெற்றன.
குறிப்பாக மாலை இரவு (8 மணிக்குப்பின்) இங்குள்ள கடற்கரைப் பிரதேசங்களில் ஒன்று கூடும் சிலர் மதுபாவனை, போதைவஸ்து மற்றும் பாலியல் துர்நடத்தைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
சுனாமிக்குப் பின் கடற்கரைப் பிரதேசங்களில் வளர்ந்துள்ள பற்றைக்காடுகளுக்குள்ளும், அகற்றப்படாத பாழடைந்த கட்டிடங்களுக்குள்ளும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
தூர இடங்களில் இருந்து வரும் ஆண் – பெண் இருபாலரும் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள கடற்கரைகளில் பெண்களின் உள் மற்றும் மேலாடைகள் கிழிந்த நிலையில் கிடப்பதையும், பியர் டின்களையும் காணக்கூடியதாகவுள்ளது..

 

amparai-a

கடந்த காலங்களில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட ஜோடிகள் பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியிலும், யுத்தம் நிறைவுற்ற பின்னரான காலப்பகுதியிலுமே இவ்வாறான கலாசார சீரழிவுகள் இடம் பெற்றுவருகின்றன. கடந்த சனிக்கிழமை கூட கல்லாறு – பெரியநீலாவணை கடற்கரைப் பகுதியில் மாணவி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்கு தூண்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
கடற்கரை பகுதிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகள், பாழடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் பொலிஸார் இரவுவேளையில் கடற்கரை பிரதேசங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்

amparai-b amparai-c