பூரண ஹர்த்தாளை அனுஸ்டிக்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வினை பிற்போட வேண்டும்

0
1310
R.Thurairatnam-452x300வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நாளை(27) பூரண ஹர்த்தாளை அனுஸ்டிக்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வினை பிற்போட வேண்டும். அவ்வாறு நிகழ்வு நடத்தப்பட்டால், அந்நிகழ்வுக்கு மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இதில் தமிழ்பேசும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்தேசிய கூட்;டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தற்போது தெரிவித்தார்..

வடக்கு கிழக்கிலே நடைபெற்றுவருகின்ற போராட்டங்கள் நீடித்து செல்கின்ற போதிலும், அதற்கான தீர்வு கிடைக்காமையினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்திற்கு சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள், பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள், அரசியல் கட்சிகள் தமது பூரண ஆதரவினை தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை உவர்மலை விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 08.30மணிக்கு ஆளுனர் தலைமையில் தமிழ், சிங்கள சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. குறித்த நிகழ்வுக்கு மாகாணத்தில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் செயலாளர்களுக்கும் அழைப்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல் கட்சிகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், குறித்த நிகழ்வுக்கு தமிழ்பேசும் அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள். இவ்வாறான நிலையில் குறித்த நிகழ்வினை பிற்போட ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.