மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

0
13420

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.

பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை(at 3.28am. )   சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் வீதியை சேர்ந்த ஐ.விஜிதகுமாரி என்னும் 35 வயதுடைய பெண்ணே இந்த நான்கு குழந்தைகளை பிரவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை குழந்தைகளின் நிறை குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக குழந்தை நல வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக குறித்த குழந்தைகள் பாதுகாப்பான முறையில் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

hospital-dhospital-ehospital-a hospital-b hospital-c