வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு

0
798

(சிவம்)

வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (26) அதன் அலுவலகத்தில் நடைபெற்றபோது சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.notice-a

வடக்கு கிழக்கு மக்களினால் கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம் மற்றும் மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் என்பன காலவரையறையின்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன இது தொடர்பில் அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடுபவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுதத்தி கடையடைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.