நாளைய தினம் இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி பூரண ஆதரவு

0
454

நாளைய தினம் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் இன்று(26) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களினால் கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் மற்றும் மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் என்பன காலரையறையின்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன இது தொடர்பில் அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடுபவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் இவ்விடயங்களை சுட்டிக் காட்டி அரசிற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் முகமாக நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தனது பூரண ஆதரவை வழங்குவதோடு கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இதற்கான பூரண ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் அத்துடன் இன மத பேதமின்றி இது இந்த நாட்டினுடைய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான போராட்டம் என்கின்ற நோக்கோடு அனைவரும் இதற்கான ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.