மகிழடித்தீவு வைத்தியசாலையில் நட்பு மையம் திறப்பு

0
1226

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு வைத்திசாலையில் நட்பு மையம் நேற்று(25) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கில், குறித்த நட்பு மையம் திறந்து வைக்கப்பட்டதாக தாய், சேய் நல வைத்திய நிபுணர் எம். அச்சுதன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகளில், குறித்த மையம் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் பால்நிலை ரீதியிலான வன்முறைகளை குறைக்க கூடியதாகவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம், சுகாதார திணைக்களத்துடன் இணைந்து குறித்த மையங்களை நிறுவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நட்பு மைய திறப்பு நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி அமையத்தின் பணிப்பாளர் எம். வுகாரி, தாய், சேய் நல வைத்திய நிபுணர் எம். அச்சுதன், மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி ரி.தவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

DSC05554 DSC05534 DSC05535 DSC05547