மட்டு.  பயிற்றுவிப்பாளர் வள நிலையத்துக்கான அலுவலக, பயிற்சி உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
1005

DSC_1604மட்டக்களப்பு மாவட்டத்தின் மனித வள அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையத்துக்கான அலுவலக மற்றும் பயிற்சி உபகரணங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.ஏப்ரல் 2017) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளிக்கப்பட்டன.
இவற்ற்றினை அக்ரெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் ஆர்.கஜேந்திரன் வழங்கி வைத்தார். இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் பங்கு கொண்டனர்.
இந்த உபகரணத் தொகுதியில் அலுவலகக் கணணிகள், மடிக்கணணி, அலுமாரி, அலுவலர்களுக்கான கதிரைகள், கதிரைகள், பயிற்சி உபகரணங்களும் அடங்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அக்ரெட் (யுஊவுநுனு) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ~சமூக அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி இணை உருவாக்கம்~ திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மனித வள அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாவட்ட பயிற்றுவிப்பாளர்களைச் சந்தித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தின் தேவையை உணர்ந்து செயற்படுதல் பற்றி ஆலோசனைகளை வழங்கியதுடன் தொடர்ச்சியாகவும் வள நிலையத்தின் மேம்பாட்டின் முக்கியம் குறித்தும் விளக்கம் வழங்கினார்.
சிறந்த சமூக அபிவிருத்தியை எட்டும் பொருட்டு பொது மக்கள்சார் சமூக நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துதல் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி இணை உருவாக்கம் திட்டத்தில் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தில் பயிற்சிகளைப் பெற்ற 30 பேரைக்கொண்ட பயிற்சியளர்கள் இவ் வள நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மனிதவள அபிவிருத்தி தொடர்பான பயிற்சிகளுக்கான தேவைப்பாடுடைய அரச, அரச சார்பற்ற, தனியார் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் இந் நிலையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் பயிற்சிகளைகளையும், பயிற்சி ஒழுங்கமைப்புக்களையும், ஆய்வு சார் பணிகளையும் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தூர நோக்கான சிந்தனையில் மாவட்டத்தின் நீடீத்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்திகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சித்திட்டமும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு- இணைப்பாளர், மாவட்ட வள நிலையம், மாவட்ட செயலகம் மட்டக்களப்பு, விலாசத்துடனோ resourcepoolbatti@gmail.com   என்ற மின் அஞ்சலுடனும் தொடர்பு கொள்ள முடியும்.DSC_1600

DSC_1598 DSC_1603