அம்பாரை தமிழ் மக்குளுக்காக என் உயிரையும் விடத்தயார் – கி. மா. சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

0
430

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் என்னுடைய பயணமும் தொடர்ந்து கொண்டு இருக்குமே தவிர இதனை எந்த தீய சக்தியாலும் தடுத்து நிறுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். அதே வேளை பணத்துக்கோ சலுகைக்கோ சோரம்போகாது அம்பாரைமாவட்ட  தமிழ்மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய உயிரையும் விடத்தயார் என கிழக்குமாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் 11 ஆண்டு நிறைவு விழாவும்  சமய சமூக சேவையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு  24 ஆம் திகதி திங்கட்கிழமை  மாலை கல்முனை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில்  சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் தலைவர்  கா.கதிர்காமத்தம்பி தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் போது கிழக்குமாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்(J P) கல்முனைத் தமிழ்ப் பிரிவு  பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் க.லவநாதன் ஊடகவியலாளரும் ஆசிரியரும் ஆகிய ஆர்.தில்லைநாயகம் (J P)ஆகியோர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு பிரஜைகள் குழுவில் பலர் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வின்போது கிழக்குமாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் நிதியின் மூலம் 47 கதிரைகள் வழங்கிவைக்கப்படன.

அவர் மேலும் பேசுகையில் கடந்த சில மாதங்களாக நான் நோய்வாய்ப்பட்டு இருந்தேன் என்னுடைய மக்களின் பிராத்தனையினால் இறைவனால் காப்பாற்றப்பட்டு இன்று உங்கள் முன் சேவை செய்வதற்காக வந்துள்ளேன் .

இவ்வாறு சேவை செய்வதைப் பொறுத்துக்கொள்ளாத சில தீய சக்திகள் பொய்களைக் கூறி என்னையும் எமது மக்களையும் திசைதிருப்ப முனைகின்றனர் இதற்கு நானும் எனது மக்களும் இடமளியோம்

எமது நோக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதனை நிறைவேற்றுவேன் மக்களுக்காகவே என்னுடைய சேவை இருக்கு மேதவிர வேறு எதற்கும் அல்ல நான் மாகாண சபை உறுப்பினராக இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் தேவைகளை எடுத்துக் கூறி சில தேவைகளை நிறைவு செய்து உள்ளேன் யாருடைய பணத்திற்கோ சலுகைக்கோ சோரம் போகதவனாக இருந்துகொண்டு என்னுடைய சேவை தொடர்ந்துகொண்டு இருக்கும் என்றார்.rajeswaran-a thillai-a ds-a