சட்ட விரோத மண் அகழ்வை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

0
586

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக பிரிவில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டமென்று இன்று (25) இலுபையடிச்சேனை பிரதான வீதியில் நடைபெற்றது.

இலுப்பயடிச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம், விவசாய அமைப்பு போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது..

பதுளை ஏ5 வீதியில் அமைந்துள்ள கிராமங்களில் கொடுவாமடு தொடக்கம் புல்லுமலை வரை சட்டவிரோதமான முறையில் பாரிய மண் அகழ்வினை நகரப் புறங்களில் வாழும் செல்வந்தர்கள் கனரக வாகனங்களில் மூலமாக இரவு பகலாக மண் அகழ்வு மேற்கொள்வதினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சட்ட விரோத மண் அகழ்வினால் பாரிய விவசாய நிலங்கள் மண் அரிப்புக்கு உள்ளாகுதல், மண் அகழ்வினால் விவயாத்திற்கு நீர் வழங்கும் கால் வாய்கள் பாதிக்கப்படுதல், காரைக்காடு பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் ஏற்படுதல், மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மூலமாக பாதைகள் பாதிக்கப்படுதல், மாவடி ஓடை மற்றும் வண்ணாத்தி ஆறு போன்ற பகுதிகளில் சட்ட விரோத மண் அகழப்படுவதாகவும், சட்ட விரோத மரம் வெட்டுதல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் வருகைதந்து குறித்த விடயம் தொடர்பாக விரைவில் தீர்;வினைப் பெற்றுத்தருவாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.chenkalady-a chenkalady-b chenkalady-c