கல்முனை சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் 11வது ஆண்டு விழா

0
405

கல்முனை சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் 11வது ஆண்டு விழாவும், சமய, சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்களும், சத்துணவு வழங்கும் நிகழ்வு நேற்று மாலை  (24) கல்முனை பல்தேவை கட்டடத்தில் தலைவர் கா.கதிர்காமத்தம்பி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது..

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் க.லவநாதன், சிறப்பு அதிதியாக சமாதன நீதிவானும், ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஆர்.தில்லைநாயகம் மற்றும் சிறப்பு வருகையாளர்களாக சமூகசேவை உத்தியோகத்தர்  பொன்.சுந்தரராஜன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தவராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார், கிராம சேவகர்களான எஸ்.மனோகரன், திருமதி லளினி யோகராசா எஸ்.அமலநாதன் மற்றும் கிராம அக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மு.இராஜேஸ்வரன், கே.லவநாதன், ஆர்.தில்லைநாயகம் ஆகியோருக்கு அவர்களது சேவையினை பாராட்டி பாராட்டுப்பத்திரம் வழங்கி  கௌரவித்ததுடன் முதியோர்களின் சமூக, சமய சேவையினை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன் அவர்களுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.

முதியோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் இங்கு மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

kalmunai-aa kalmunai-bb kalmunai-cc kalmunai-dd