கிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்

0
4098

east-a
(வேதாந்தி)
கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே வேட்பாளர் தெரிவும் இடம்பெறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் மத்தியில் தனிமாவட்டம்,தனிமாகாணம், என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படடு மாகாணத்தில் யாரும் வாழலாம் மாகாணத்தை முஸ்லிம்களே ஆளவேண்டும் என்ற பிரச்சாரம் கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதால்  கிழக்கு மாகாணத்தேர்தலில்  கூட்டமைப்பு இம்முறை எந்தவிட்டுக்கொடுப்பும் செய்யாமல் முதலமைச்சரை தன்வசப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கில் தமிழர்கள்  ஒருமித்து வாக்களிக்கும் பட்சத்தில்13 உடன் இரு போனஸ் ஆசனங்களுடன் மொத்தம் 15 ஆசனங்களைப்பெற்று ஆட்சியமைக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு இதைனை கூட்டமைப்பு கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும்..
அது மாத்திரமன்றி பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,இளைஞர்கள் கிழக்கில் பட்டிதொன்றியெடுங்கம் தமிழர்களை வாக்களிக்கதூண்டுவதுடன் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
நவம்பர் மாதத்திற்கு முன்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள் இம்முறை கிழக்கில் வாக்குகளைப்பிரித்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வழி கோலக்கூடாது  என்பதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
சும்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் கிழக்கில் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான யுத்திகளை இப்போதிருந்தே கட்டாயம் கையாள வேண்டும்.
தற்போதைய சூழலில் கிழக்கில் தமிழர்கள் பிரிந்து நின்றால் எமது இருப்பு கேள்விக்குள்ளாகும் நிலமை ஏற்படும் என்பதை தற்போதைய நடவடிக்கைகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன..
எனவே கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை கவனத்தில் கொண்டு கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் விட்டுக்கொடுப்புகளுடன் ஒன்று சேர்ந்து மாகாணசபையை கைப்பற்றி ஏனைய இன  மக்களையும் அரவணைத்து முதலமைச்சரை தமிழர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும்..