சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் காணிகோரி போராட்டம்

0
565

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ பணிபுரியும் பணியாளர்கள் இன்றுகாலை காணிகோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ உள்ள பண்ணைகளை நடாத்திவரும் காணிகளை காணி உரிமையாளர்கள் கோரிவரும் நிலையில் பண்ணைகள் நடாத்திக் கொண்டிருக்கும்  காணிகளை தமக்கு தருமாற்றும் இந்த வேலையினூடாகவே தமது வாழ்வாதாரம் கொண்டுசெல்லப்படுவதாகவும் கோரிக்கை விடுத்தனர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் காலை ஒன்பதுமுப்பது மணிக்கு ஆரம்பமான போராட்டம் பரந்தன் முல்லைத்தீவு  வீதிவழியாக சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை சந்தித்து மகயர் ஒன்றையும் கையளித்தனர்.

அரச உத்தியோகத்தர்களான இவர்கள் இன்று காலை அலுவலக நேரத்தில் இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் இதேவேளை இரானுவத்தினரிடமுள்ள காணிகளை மக்கள் போராடி பெற்றுக்கொண்டுவரும் நிலையில் இராணுவத்திற்கு காணி சுபீகரிப்புக்கு திட்டமிட்டு போராட்டம் நடத்தப்படுவதாகவும் தனியார் காணிகளை சுபீகரிக்க முற்படும் இந்த நடவடிக்கை இராணுவத்தின் திட்டமிட்ட செயல் எனவும் சமூகஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் udaiyaikaddu-a udaiyarkaddu-b