தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

0
347

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுத்து வந்தபோதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மக்களின் போராட்டங்கள் நிறுத்தபட்டன.

இந்த நிலையில் பொதுமக்கள் தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்தனர்

இந்நிலையில் இன்று ஐம்பத்து ஐந்தாவது   நாளாக நடைபெறும் போராட்டத்திலீடுபடும் மக்கள் தர்மத்தின் வழியில் போராடும் நோக்கோடு எமது மூதாதையர் எமக்காக தேடிய சொத்தை அத்துமீறி கையகப்படுத்தியுள்ள இராணுவம் வெளியேறி நாம் வீதியோரத்தில் படும் வேதனை நீங்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் வழிவிட வேண்டுமென கோரி தர்மத்தின் 108 தேங்காய்களை உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்  

இன்று காலை போராட்ட இடத்திலிருந்து உளவு இயந்திரம் மூலம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சென்று நண்பகல் பன்னிரண்டு மணியளவில் நூற்ரிஎட்டு தேங்காய் களை உடைத்து நீதிகோரி தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டனர் இதன்மூலம் தாம் தமது சொந்த ஊரில் குடியேறவிடாது தடுக்கும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்

இவர்களது இந்த வழிபாட்டில் வடமாகான சபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டார் .keppapulavu-b keppapulavu-c