வடமாகாணத்தில் ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவை ஆதரவு

0
305

காணாமல் போனோர் மற்றும் நில மீட்புப் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது என  அப்பேரவையின்; இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார்.

திருகோணமலை விலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (23)  நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலேயேஇ மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

தங்களின் காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிஇ திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரின் உறவினர்களைஇ தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் ஞாயிறு மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போதுஇ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்துக்குச் சென்றுஇ காணாமல் போன உறவினர்களுக்கு தமது ஆதரவையும் ஆறுதலையும் வெளிப்படுத்தியுள்ளனார்.