அரசியல் அழுத்தங்களையும் தாண்டி தகுதியான அதிபரைப் பெறுகிறது றகுமானியா…..?

0
455

uthayarupan_aபல நாட்களாக இழுபறி நிலையிலிருந்த மட்/மம/ றகுமானியா மகா வித்தியாலய தகுதியான அதிபர் நியமிப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர்         பொன்னுத்துரை உதயருபன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட 1 ஏ.பி. தரப் பாடசாலையான மட்/மம/ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தரத்திலுள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதை எழுத்து மூலமாக சுட்டிக்காட்டியிருந்த நிலையில், கடந்த 19/04/2017 அன்று மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் மற்றும் குறித்த பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். அதனையடுத்து

அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி தகுதியான அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார் என தான் உறுதியளிப்பதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.