மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

0
792
ariyam-a-க.விஜயரெத்தினம்)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் (29.4.2017) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் தெரிவித்தார்..

நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மத்திய குழுக்கூட்டத்தில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், தொகுதித் தலைவர்கள்,செயலாளர்கள்,பொருளாளர்கள்,தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியினர்கள்,மகளீர் அணியினர்கள் போன்றோர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள்,தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு நடாத்துதல் பற்றி ஆராய்தல்,வடகிழக்கில் தற்போதைய நிலைமைகள்,போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.