எருவில் கிராமத்தில் சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா

0
493

சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா சித்திரை குதூகல நிகழ்வானது நேற்று (22) எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில விளையாட்டுக்கழகத்தலைவர் மு.இளையராஜா தலைமையில்; நடைபெற்றது..

இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக பத்மபூஷணம் சாதக திலகம் சிவஸ்ரீ க.வடிவேல் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன, கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா பிரதம அதிதிகளாகவும் மற்றும் விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வாருட விiளாயாட்டு போட்டியில் முதல் நிகழ்வாக ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், மருதனோட்டம், பெண்களுக்கான மருதனோட்டம் உட்பட ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட ரொட்டரிக்கழக தலைவரும் நிருவாக பணிப்பாளருமான எஸ்.புஸ்பராசா அவர்களினால் ஊனமுற்றவர்களுக்கான பொருட்களும் கையளிக்கப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.eruvil-a eruvil-b eruvil-c eruvil-d eruvil-e eruvil-f