மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் ஆதரவு போராட்டமொன்றை நிகழ்த்தவேண்டும்-புவனேஸ்வரன்

0
297

puvaneswaran-aகேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இறுதியுத்தம் நிறைவடைந்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் கேப்பாபுலவு மக்கள் மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுத்து வந்தபோதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மக்களின் போராட்டங்கள் நிறுத்தபட்டன.

இந்த நிலையில் பொதுமக்கள் தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்தனர்

இந்நிலையில் இன்று ஐம்பத்து மூன்றாவது நாளாக நடைபெறும் போராட்ட இடத்துக்கு சென்ற வடமாகான சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் மக்களோடு கலந்துரையாடி கருத்து தெரிவிக்கையில் .இந்தமக்கள் கடந்த ஐம்பத்து மூன்று நாட்களாக வீதியோரத்திலிருந்து நோய் நொடிகளுக்கு இலக்காகி இருதிக்கட்டத்திளிருக்கின்றனர்

ஆனால் காநிவிடுவிப்பு தொடர்பான எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லை அரசாங்கம் இவ்வளவு நாளாக மக்களை அலைக்கழிப்பது ஒரு நல்ல செயற்ப்பாடு அல்ல நல்லாட்சி அரசாங்கம் மறைமுகமாக மக்களுக்கு பல தீங்குகளை செய்கிறது அதில் இந்த காணி விடுவிப்பு விடயம் முக்கியமானது

ஆனாலும் காநிவிடுவிப்பை இவளவு நாளாக தீர்வின்றி தொடரவிடுவது  மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் செய்கின்ற தவறு என நான் கருதுகிறேன் இதற்கு மேலும் இந்த மக்களை இவ்விடத்தில் இருக்கவிடாது இந்த நிலவிடுவிப்பை விரைவு படுத்துவதற்காக பிளவுக்குடியிருப்பு போராட்டத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்கிநோமோ அதேபோல் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய  போராட்டங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.