சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது

0
412
vikkineswaran-aஎன்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவரிடம் தெரிவித்துள்ளார்

 யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்
யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது
நீங்கள் கேட்கும் சமஷ்டி கோரிக்கையை தெற்கில் பெரும்பான்மையின மக்கள் பிரிவினையாக பார்ப்பதாகவும் சில நாடுகளில் சமஸ்டி பிரிவினைக்கு வழி அமைத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டி துருக்கி தூதுவர் இதன்போது கேள்வி எழுப்பினார்
எங்களை நாங்களே ஆளும் ஒரு நிரந்தர தீர்வையே தாம் எதிர்பார்க்கும் பொருட்டு சமஷ்டியை தாம் கோருவதாக முதலமைச்சர் பதிலளித்தார்.
தொடர்ந்து யாழ்மாவட்டத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த துங்கா ஒஸ்கா அங்கு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவையும் சந்த்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
News.lk