இலங்கையில் அதிகரித்துவரும் “பெண்களின் மரணம் “சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பினர் மட்டக்களப்பில்

0
315

இலங்கையில் அதிகரித்துவரும் “பெண்களின் மரணம் “சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பினர் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து, மாவட்டத்தின் “மரணவிசாரனை அதிகாரிகளை “சந்தித்து கலந்துரையாடினர்..

விபத்துக்கள் மூலமும் , காதல் விவகாரம், குடும்ப பிணக்கு, கடன் தொல்லை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டவர்களின் விபரங்கள் கேட்டறியப்பட்டதோடு,
இவர்களின் மரணத்தின் பின்னர் குடும்ப நிலைமை எப்படியிருக்கிறது என்பது சம்பந்தமான ஆய்வுகளையும் இக்குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழக வைத்தியதுறை பேராசிரியை திருமதி அனுருத்தி எதிரிசிங்க, கட்டான பொலிஸ் அகடமியின் பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிஸாந்த சந்திரசேகர (SP) , Dr.ரொட்றிக்கோ மற்றும் மரணவிசாரனை அதிகாரிகளான ஜனாப் நஸீர், திரு :கணேஸ், திரு :ரமேஸ், திரு :ராஜ் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.hospital-a hospital-b hospital-c