கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க ஒன்றுசேருமாறு துண்டுப்பிரசுரம்

0
1712

notice-a

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் ஒன்றுசேருமாறு கூறி அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் இன்று(21) விநியோகிக்கப்பட்டன..

பிரதேசத்தில் விற்பனையாகும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, மதுப்பாவனையை இல்லாதொழித்தல், இளவயது திருமணம், சில நுண்கடன் வழங்குனர்களின் நடவடிக்கை மற்றும் சமூகசீர்கேடுகளை ஒழித்தல். மாணவர்களின் இடைவிலகலை தடுத்தல். டெங்கு உருவாகும் இடங்களை அழித்தல், புதிய நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருத்தல் தொடர்பில் கிராமசேவையாளருக்கு அறிவித்தல். போன்ற பல செயற்பாடுகளை முன்னெடுத்து, கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தின் சிறப்பையும், நற்பெயரையும் காப்பதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரசுரத்தின் கீழே பொலிஸ் சமுதாயப்பிரிவு, கொக்கட்டிச்சோலை எனவும் அச்சிடப்பட்டுள்ளது.