காணி விடுவிப்பிற்கு அரசாங்கத்திற்கு14 நாள் கால அவகாசம் வழங்கிய வட்டுவாகல் மக்கள்

0
349

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றையதினம் காலையில்  போராட்ட இடத்திலிருந்து  புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதி  வழியாக  மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் புதிதாக  அமைக்கப்பட்ட காந்தி சிலை வரை பேரணியாக வருகைதந்து  அகிம்சாவாதியான காந்தி சிலையை திறந்துவைத்து அதனருகில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

தமது காணி விடுவிப்பு தொடர்பில் 14 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக  தெரிவிக்கும் மக்கள் குறித்த காலப்பகுதியில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் உரிய தீர்வு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

பொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கடற்படை மற்றும் இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்

இறுதியாக மக்கள் ஜனாதிபதிக்கான மகயர்ரை மேலதிக அரசாங்க அதிபர் போராட்ட காளத்துக்கு நேரில் வந்து பெற்று கொண்டார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் வழங்கப்பட்டது மற்றும் பிரதமர், ஏனைய அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்,பிரதி அவைத்தலைவர் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொலை நகல், மின்னஞ்சல், பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து உணவுதவிர்ப்பை நிறுத்தி போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்

14 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோமென மக்கள் தெரிவிக்கின்றனர் .vadduvakal-a vadduvakal-b