பகுதியளவில் காணி விடுவிப்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை.கேப்பாபுலவு மக்கள்

0
473

keppapulavu-aaமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 52 ஆவது நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு  வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது..

இந்த நிலையில் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பகுதியளவில் விடுவிக்கப்படும் காணிகளை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ள மக்கள் ஒட்டுமொத்த காணிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது