கல்முனை மாகரசபை தமிழர் விவகாரம் தொடர்பில் கிழக்குமுதலமைச்சருடன் சுமுகமான பேச்சுவார்த்தை!

0
437
பிரச்சினை இருந்தால் நேரடியாகப்பேசலாம் என்கிறார் முதலமைச்சர்!
காரைதீவு  நிருபர் சகா
ehamparam-a
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட தமிழர்  பிரதேச வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டுடன் கல்முனை தமிழ்ப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
 
இச்சந்திப்பு நேற்று திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் பணிமனையில் நடைபெற்றது.

 
கல்முனையிலிருந்து சென்ற தமிழர் தரப்பில் கல்முனை மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீமுடனான கல்முனைச்சந்திப்பில் எட்டப்பட்ட கல்முனை மாகரசபைக்குட்பட்ட பல விடயங்கள் தொடர்பான தொடர் சந்திப்பாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது..
 
அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பையடுத்து கல்முனை மாகரசபையால் 5லட்சருபா செலவில் தற்பேதது கட்டப்பட்டுவரும் பொது மயான சுற்றுமதிலுக்கான ஒதுக்கீடு போதாது என்று குழுவினர் முதலில் எடுத்துரைத்தனர்.
பதிலளித்த முதலமைச்சர் மீதிவேலைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும் .உடனடியாகச் செய்து முடியுங்கள்.என்றார்.
 
கல்முனைபாண்டிருப்பு மற்றும் கல்முனை மயானங்களுக்கு உள்ளக மின்னிணைப்பு வேலைகள் நடைபெற்று ஒளியூட்டப்படவேண்டும் என தமிழர்தரப்பினர்கேட்டதற்கு அதற்கான மதிப்பீடு 1.6மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதனை நடைமுறைப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மாகரசபை பொறியியலாளரை கோரவிருக்கின்றேன் என்றார் முதலமைச்சர்.
 
மேலும் மயானத்திற்கு இரு காவலாளிகளை நியமிக்கவேண்டும் எனக்கேட்தற்கு அடுத்தவாரம் அவர்கள் நியமிக்கப்படுவார்களென முதலமைச்சர் பதிலளித்தார்.
 
கல்முனைப்பிரதேசத்தில் மத அடையாளங்கள் எவ்வகையிலும் அழிக்கப்படக்கூடாது. ஆலயங்களின் சுவர்கள் சிலைகள் தகர்க்கப்படுவது முற்றாக தவிர்க்கப்படவேண்டும். காணி அத்துமீறல்கள் ஆக்கிரமிப்பு இடம்பெறக்கூடாது. வீதிபெயர்மாற்றங்களும் உரிய தீர்மானமின்றிமேற்கொள்ளப்படக்கூடாது. தமிழர்பிரதேச மைதான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தமிழர் தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.
 
அங்கு முதலமைச்சர் கூறுகையில்:
 
மேலும் கல்முனைவாழ் தமிழ் முஸ்லிம் இரு சமுகங்களும் இனநல்லுறவுடன் பரஸ்பரம் மனம்விட்டுப்பேசி நல்லுறவுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டங்களை இருதரப்பினரும் முன்னெடுக்கவேண்டும்.
 
கல்முனை மாகரசபை தொடர்பில் தமிழர் பிரதேசம் தொடர்பில் கல்முனை மாநகரசபை ஆணையாளருடன் அடிக்கடி பேசுங்கள்.பிரச்சினைபற்றிகதையுங்கள். 
ஏதாவது தேவைகள் பிரச்சினைகள் தொடர்ந்தால் என்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தீர்க்கலாம்.
என்றார்.
 
சுமர்h ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதென ராஜன் தெரிவித்தார்.