கல்முனைக் கடற்கரைக்கண்ணகிஅம்மனாலய மதில் விசமிகளால் தகர்ப்பு

0
557
சகா
kalmunai-aa
 
கல்முனைக்கடற்கரைக் கண்ணகி அம்மனாலயத்தின் சுற்றுமதிலின் ஒரு பகுதி விசமிகளால்  தகர்க்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

 
கல்முனை 3ஆம் குறிச்சியில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கண்ணகிஅம்மனாலயத்தின் தென்மேற்குப் புறத்திலுள்ள மதில் உடைக்கப்பட்டுள்ளது..
 
இனந்தெரியாத விசமிகளால் இம்மதில் இரண்டாவது தடவையாகத் தகர்க்கப்பட்டுள்ளதாக நிருவாகம் தெரிவிக்கின்றது.
 
இதுதொடர்பில் ஆலய நிருவாகம் கல்முனைப்பொலிசில் முறையிட்டது. இருந்தபோதிலும் அப்பிரதேச இளைஞர்கள் அங்கு ஒன்றுகூடியதனால் பதட்டம் ஏற்பட்டது.
 
இதுதொடர்பில் அங்கு விஜயம்செய்த கல்முனை மாகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் பதட்டத்தைத் தணித்ததோடு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
பொலிஸ் விசாரணை!
கல்முனைப்பொலிசார் நேற்று வியாழக்கிழமை காலை ஸ்தலத்திற்குச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அச்சமயம்  கல்முனை மாகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் வெஸ்ரர் றியாஸ் உள்ளிட்டோரும் நின்றிருந்தனர்.
 
பொலிசார் ஆலயத்தைச்சூழவுள்ள இருசாராரிடமும் விசாரித்துள்ளனர். இது யாரோ வெளியிலிருந்து வந்து செய்துவிட்டு வேண்டுமென்றே இரு சாராரையும் மூட்டிவிடும் செயலாகவுள்ளதென அவர்கள் கூறியுள்ளனர்.
 
பொலிசாரின் விசாரணையையடுத்து ஆலய முன்பக்க மதில் உடைக்கப்பட்ட மதில் அனைத்தும் நேற்று வியாழக்கிழமை புனரமைக்கப்படஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் கருத்துரைக்கையில்:
 
இது திட்டமிட்டு இனமுரண்பாட்டை தோற்றுவிக்க விசமிகளால் செய்யப்பட்ட சதி வேலையாகும். இதற்குள் இருசமுகங்களும் சிக்கிவிடக்கூடாது.அவர்கள் குளிர்காய்வதற்கு நாம் துரும்பாக இருக்கக்கூடாது.
 
இதற்குமுன்பும் இப்படியான துர்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது இனநல்லுறவுக்கு குந்தகமாக அமையக்கூடும். எனவே மிகவும் நிதானமாக கவனமாக நாம் செயற்படவேண்டும். பொலிசார் சட்டப்படி செயற்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும்வரை நாம் ஒரு முடிவுக்குவரமுடியாது.
 
நேற்றுத்தான் நாம் கிழக்கு முதலமைச்சரை திருமலை சென்று சந்தித்து இனஅடையாளங்களை அழித்தல் மயானசுற்றுமதில் விளையாட்டுமைதானபுனரமைப்பு இனநல்லுறவு பற்றியெல்லாம் கலந்துயாடிவிட்டு வந்திருக்கின்றோம்.
முதலமைச்சரும் இதுவிடயத்தில் உறுதியாகவுள்ளார்.ஏதாவது பிரச்சினை என்றால் தன்னோடு பேசுமாறும் கேட்டுள்ளார்.
 
எனவே நாம் ஒற்றுமையாக வாழவேண்டும். ஒருசிலரின் சதிமுயற்சிகளுக்கு நாம் துணைபோகக்கூடாது. எனவே இந்த மதிலை பொலிசாரின் பார்வைக்குப்பின்னர் நாமே அமைப்போம்.
அதுமட்டுமல்ல ஆலயத்தின் முன்புற மதிலையும் அமைப்போம். என்றார்.
 
 
ஆலயத்திற்கு பின்புறம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.