மட்டக்களப்பில் தமிழை காப்பாற்றுங்கள்!

0
857

tamil-aகிழக்கு மாகாணம் உட்பட மட்டக்களப்பு மாவட்டம் வரை தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பெரும் பான்மையான மக்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே வாழ்கின்றார்கள்..

ஆனால் அங்கு மாகாண நிர்வாகத்திற்குள் இருக்கும் ஆட்சி மொழி முழுமையான தமிழ் வடிவம் அல்ல மாறாக கூடுதலாக ஆங்கில மொழியை தமிழில் எழுதியே பயன்படுத்தி வருகின்றனர்.

மாநகர சபை உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் நிலையங்களிலும் தமிழ் மொழி கொலைகளே அதிகமாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம் சமூகமும் தங்களது மத அடையாளமாக உள்ள அரவு மொழியை பாவிப்பதிலேயே அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் தமிழ் மொழியை காப்பாற்றுவதாக கூறி சிலர் எழுத்து பிழைகளை மட்டும் திருத்துகின்றனர் ஆனால் அந்த எழுத்து பிழைகளை விட பல மடங்கு சொற்கள் தமிழ் மொழியில் இல்லை அனைத்தும் ஆங்கில மொழியை தமிழில் எழுதியே பயன்படுத்தி வருகின்றனர் இதனை மாற்ற வேண்டும் ஒரு பிரதேசத்தின் மக்களை அவர்களது மொழி அடையாளத்தை கொண்டே முதலில் இனம் காணுகின்றனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி உள்ளூராட்சி நிர்வாகங்கள் முதலில் வர்த்தக சங்கங்களுடன் இணைந்து சுத்தமான தமிழ் மொழியை கொண்ட பெயர் பலகைகளை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாற்றம் என்பது முதலில் எம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க தாயாராக இருந்தால் இணைந்து பணியாற்ற நாம் தயார்
-நன்றி –