பண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி

0
345

மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பொது வைத்தியசாலையில், சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்து, கைகலப்பு, குடும்பதகராறு காரணமாக விபத்துக்குள்ளாகி 40பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுப்பாவனை, சட்டவிரோத மதுப்பாவனை காரணமாகவே அதிகளவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வீதி விபத்துக்கள் மூலமாக 24பேரும், கைகலப்பு, குடும்பதகராறு காணமாக 16பேரும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களை விட இவ்வருடப் பண்டிகையின் போது அதிகளவானவர்கள் குறித்த காரணங்களினால் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.