வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

0
281

முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

கரைதுரைப்பற்று பிரசேத செயலகப்பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதி முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்டது..

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட வட்டுவாகல் பிரதேசத்தில் 2010 ஆம் அண்டு ஒக்டோபர் மாதமும், முள்ளிவாய்க்கால் கிழக்கில் 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

எனினும் 37 குடும்பங்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கையக்கடுத்தியிருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.vadduvakkal-a vadduvakal-b