பாண்டிருப்பில் 102 வயதில் 4பிள்ளைகள், 19 பேரப்பிள்ளைகள், 52 பூட்டப்பிள்ளைகள், 23 கொள்ளுப்பிள்ளைகளுடன் ஆரோக்கியமாய் வாழும் வள்ளியம்மை ஆச்சி

0
3654

இன்றைய காலத்தில் நோய் நொடியின்றி ஒரு 50 வயது வரை உயிரோடு வாழ்வது என்பதே பெரும்பாடாக இருக்கின்றது. அக்காலத்து வாழ்க்கை முறை இயற்கையோடு ஒன்றிணைந்ததாக இருந்தது. நஞ்சற்ற சத்துள்ள உணவுகள், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும் உடல் உழைப்பு மற்றவரையும் அரவணைத்துச் செல்லும் வஞ்சமற்ற உள்ளம் மகிழ்ச்சி நிறைந்ததாக வாழ்க்கை இருந்தது. இதனால் மிக நீண்ட காலத்திற்கு 100 வயது வரை ஆரோக்கியமாக எம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளார்கள். .

கல்முனை தமிழ்ப் பிரிவிலுள்ள பழம்பெரும் பாண்டிருப்புக் கிராமத்தில் 102 வயதிலும் ஆரோக்கியமாய் ஒரு ஆச்சி வாழ்ந்து வருகின்றார். 1915 -10 -21 இல் பிறந்த செல்லப்பா வள்ளியம்மை எனும் ஆச்சியே ஆரோக்கியமாக வாழ்கின்றார்.
இவருக்கு 4 பிள்ளைகளும், 19 பேரப்பிள்ளைகளும், 52 பூட்டப்பிள்ளைகளும், 23 கொள்ளுப்பிள்ளைகளும் இருக்கின்றனர். தற்போது பாண்டிருப்பு -2 இல் வசிக்கும் பேத்தி கமலேஸ்வரியுடன் வசித்து வருகின்றார். இவரது கடைசி மகள் தங்கம்மாவிற்கு 72 வயது ஆகிறது.
தனது தாய் வருத்தம் வந்து படுத்தபடுக்கையாக இதுவரை இருந்ததில்லை. அத்துடன் ஒரு குளிசை(மருந்து) பாவித்தது இல்லை என்றார். தற்காலத்திலுள்ளவர்களுக்கு 40 வயதை தாண்டினாலே இடுப்பு வலி, மூட்டு வலி என அவதிப்படும் காலத்தில் தனது 102 வயதில் எழுந்து நடந்து முகம் கழுவி, தலைசீவி,தனது கையால் சாப்பிடும் இவ் வள்ளியம்மை ஆச்சி உண்மையில் ஆச்சரியம் மிக்கவர்தான்.

படமும் – தகவலும் அகரம் செ.துஜியந்தன்valliyammai-a valliyammai-b