மிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி பாறுக்

0
246
sifly farook-aகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள்  உற்பத்தி செய்யும் தொழிலினை மேற்கொள்ளும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் சுய தொழில் உபகரணங்கள் 2017.04.19ஆந்திகதி-புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வறுமைக்கு மத்தியில் தங்களது குடும்ப வருமானத்திற்காக இச்சுய தொழிலினை மேற்கொண்டுவந்த போதிலும்  தங்களின் தொழிலிற்கான போதியாளவான உபகரணங்கள் இல்லாமை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து தங்களின் தொழிலினை மேம்படுத்துவதற்காக சுய தொழில் உபகரணங்களை  பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளலர் ஷிப்லி பாறுக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
அதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வுபகரணங்களை பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த பயனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று கையளித்து வைத்தார்..