அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்..

0
617
அனைவரும் வாரீர்  விளையாட்டுவிழாவில் கோடீஸ்வரன் எம்.பி.அழைப்பு!
காரைதீவு   சகா
 
அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில் எதிர்வரும் மேமாதம் 1ஆம் திகதி நடைபெறஉள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயா உள்ளிட்ட சகலதலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.எனவே அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்..
 
இவ்வாறு  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விழாவில் உரையாற்றுகையில் அழைப்புவிடுத்தார்.
 
 
ஹேவிளம்பி சித்திரைப்புத்தாண்டினையும் கழகத்தின் 34வது வருடபூர்த்தியையும்  முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகமும்  விபுலானந்த சனசமுக நிலையமும்  இணைந்து காரைதீவில் 21வது கலாசார சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவை நடாத்தியது.
 
காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில்  இப்புத்தாண்டுவிழா  சனிக்கிழமை கழகத்தலைவர் வெற்றி.அருள்குமரன் தலைமையில் நடைபெற்றது.
 
 
இவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்; கலந்துசிறப்பித்தார்.கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் பல அதிதிகள்  கலந்து சிறப்பித்தார்கள்.
 
 
அன்று காலை 7மணிக்கு ஆண்களுக்கான பைசிக்கிள்ஓட்டம் மரதன் ஓட்டப்போட்டி சதுப்புநிலஓட்டப்போட்டி கடலில் படகோட்டம் முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
அன்று  பி.ப.3மணி முதல் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. சறுக்குமரம் ஏறுதல் கயிறுஇழுத்தல் தலையணைச்சமர் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் தேங்காய்துருவுதல் கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறற்றன.வழமைபோல க.பொ.த. சா.த. மற்றும்  உ.த. 18 கல்விச்சாதனையாளர்கள் பகிரங்கமாகப் பாராட்டிக் கௌரவிக்கப்ப்ட்டனர்.
 
அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:
 
அம்பாறை மாவட்டத்தில் இத்துணை பிரமாண்டமாக வெகுவிமரிசையாக சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழா இடம்பெறுவது காரைதீவில்தான். அந்த வகையில் காலாகாலமாக எமது பாரம்பரியங்களை அடுத்தசந்ததிக்கு ஒப்புவித்துவருகின்ற இக்கழகம் பெருமைக்கும் பாராட்டுக்குமுரியது. சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
 
மிகவும் சிறப்பாக காலைமுதல் இந்தக்கணம் வரை மரபுரீதியான கலாசார விளையாட்டுவிழா கண்கவர் நிகழ்வுகள்  களைகட்டியுள்ளன. இங்கு சூழ்ந்துள்ள பொதுமக்களே அதற்கு சாட்சி.
 
அதுமட்டுமல்ல வருடாந்தம் பகிரங்கமாக இங்கு கல்விச்சாதனையாளர்கள் பாராட்டிவருவதென்பது மிகவும் பெரிய விடயமாகப்பார்க்கின்றேன். இன்று காரைதீவு கொடி கட்டிப்பறப்பதற்கு அடிப்படைக்காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.இது மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வு.இத்தகைய  நிகழ்வை கட்டாயம் ஏனைய ஊர்களும் பின்பற்றவேண்டும். என்றார்.karaithivu-a sports-a sports-b