அரசியல்வாதிகளே எங்களை அரசியல்பகடைக் காய்களாக்காதீர்கள்!

0
331
12வருடமாக நுண்கலைத்துறைப்பட்டதாரிகளுக்கு அரசதொழில் இல்லை!
இன்று 51வது நாளில்  அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கோரிக்கை!

காரைதீவு  சகா
 
நாம் கடந்த 51தினங்களாக் இருந்து சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவருகின்றோம். எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.  அரசியல்வாதிகளே எம்மைவைத்து அரசியல் நடத்தவேண்டாம்.எம்மைப் பகடைக்காய்களாக்காதீர்கள்.
 
இவ்வாறு காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே முகாமிட்டு இன்று  செவ்hய்க்கிழமை 51ஆவது தினமாக தொடர் சத்தியாக்கிரப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் தெரிவித்தனர். .
 
அவர்கள் முகாமிட்டுள்ள பிரதானவீதிகளில் கறுப்புநிறக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு கூடாரத்தின்முன்னாக கறுப்புநிற சீலைகளாலும் பதாதைகளாலும் சூழப்பட்டிருந்தன.
பிரதானவீதியின் இருமருங்கிலும் கம்பங்கள் நட்டு கறுப்புநிறக்கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
கையாலாகாத அரசியல்வாதிகளும் புறக்கணிக்கப்படும் பட்டதாரிகளும் : நாளைய தலைவர்கள் நாங்களே என்ற பதாதை கூடாரத்தின் முன்தொங்கவிடப்பட்டுள்ளது.
 
பட்டதாரிகள்; மேலும் தெரிவிக்கையில்:
வடக்கு கிழக்கு என்றும் இலங்கையில் பெயர்பொறித்துருகின்றது. யுத்தமென்றாலும் சரி.கல்வி என்றாலும் சரி. இப்போ தொடர்போராட்டமென்றாலும் சரி வடக்குகிழக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.   
 
நாம் கேட்பதெல்லாம் காணியோ உயிரையோ அல்ல. மாறாக தொழிலையே கேட்கின்றோம். நாம் படித்த படிப்பிற்கு உரிய தொழிலையையே கேட்கின்றோம்.
 
அரச தொழில் கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.எத்தனை நாட்கள் சென்றாலும் எமது பேராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லைஎன்றார்.
 
12வருடமாக நுண்கலைப்படடதாரிகளுக்கு அரசதொழில் இல்லை!
 
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைள் நிறுவகத்தில் நுண்கலைத்துறையில் இதுவரை 12வருடகாலமாக பயின்று வெளியேறிய எந்தப்பட்டதாரிக்கும் அரச தொழில் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் பொருளாளர் குணசேகரம் சுரேஸ்குமார் சீற்றத்துடன் தமது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைள் நிறுவகத்தில் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடப்பரப்பை 5வருடங்களாகப்பயின்று 2014இல் நுண்கலைமாணி பட்டம் பெற்ற சுரேஸ்குமார் காரைதீவைச்சேர்ந்த ஒரு வேலையில்லாப்பட்டதாரி ஆவார்.
 
அவர் மேலும் கருத்துரைக்கையில்;
 
கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்றை நிறுவகம் தொடங்கிய 2005ஆண்டு காலம்முதல் அங்கு பட்டப்படிப்பைப்பூர்த்திசெய்த எந்தவொரு பட்டதாரிக்கும் இதுவரை அரசாங்கத்தொழில் கிடைக்கவில்லையென்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது.
 
 
இதுவரை  வெளியேறிய சுமார் 650 பேர் இன்னமும் தொழிலில்லாமல் அலைகின்றார்கள்.2012இல் முதலாவது பட்டமளிப்புவிழா இடம்பெற்றகாலம் முதல் வெளியேறிய அத்தனைபட்டதாரிகளும் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னமும் யாராவது இத்துறைகளை நாடுவார்களா? இந்நிலை தொடர்ந்தால் தமிழர் கலைகள் அழியுமா? மாட்டாதா? தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள். இதுவிடயம் அவர்களுக்குத் தெரியுமா?
காரைதீவில் மட்டும் இதுவரை 26நுண்கலைப்பட்டதாரிகள் வெளியேறி தொழிலில்லாமலுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் இவ்விதம் 72பேருள்ளனர்.
 
 
அதாவது 12வருடகாலமாக அங்கு படித்துவெளியேறிய எந்தவொரு நுண்கலைப்பட்டதாரிக்கும் தொழில் வழங்கப்படவில்லை.இதுவொரு அநீதி பாரபட்சம். இதேவேளை சிங்களப்பிரதேசங்களில் சிங்கள நுண்கலைப்பட்டதாரிகளை தொழிலுக்குள் இணைத்துள்ளார்கள். 
 
தமிழர்தம் கலைகளை வளர்க்கவேண்டும். அதுவம் அருகிவரும் நாட்டுக்கூத்து நாடகம் போன்றகலைகளை வளர்க்கவேண்டும் என்றுசொல்லி  என்போன்ற பல மாணவர்கள் கலைத்துறையிலும் நுண்கலையைப் படித்தோம்.
 
சித்திரம் சங்கீதம் நடனம் நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களைப்பயின்றோம். எமக்குத்தந்த பட்டம் நுண்கலைமாணி(B.FA) என்பதாகும்.
ஆரம்பத்தில்  நடனம் சித்திரம் சங்கீதம்  போன்ற பாடங்களில் பயின்றபோதிலும் 2007முதல் பல நுண்கலைத்துறைப்பாடங்கள் குறிப்பாக நாடகமும் அரங்கியலும் பரதநாட்டியம் போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாமும் பயின்றோம். இன்று தொழிலுக்காக நாட்கணக்கில் போராடவேண்டியுள்ளது.
 
கிழக்கில் பாரபட்சம் அநீதி.
கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை 2016 ஆகஸ்ட்டில்  கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கோரியிருந்தது.
அதில் நுண்கலைப்பாடத்துறைகளுக்கு தமிழ்மொழிமூலம் எந்த வெற்றிடமுமில்லை. ஆனால் சிங்கள மொழிமூலத்தில் வெற்றிடமுள்ளன எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இன்றும் எத்தனையோ தமழ்மொழிமூலப்பாடசாலைகளில் சிததிரம் நடயம் சங்கீதம் நாடகம் அரங்கியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றாhர்கள். 
அதாவது தமிழ்மொழிமூல நுண்கலைப்பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவொரு பாரபட்சம் அநீதி.
த.தே.கூட்டமைப்பினர் இருந்தும் இதுவிடயத்தை கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. அன்று நாம் குரல் எழுப்பியிருந்தோம். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.குறிப்பாக தமிழ்க்கூட்டமைப்பினரும் கண்டுகொள்ளவில்லை.
 
இந்த நிலையில் தமிழர் பாரம்பரிய கலைகளை எவ்வாறு பாதுகாப்பது? அருகிவரும் கலைகளை எவ்விதம் வளர்த்தெடுப்பது? அதற்கென பட்டம் பெற்றவர்களை பகடைக்காய்கள் போல் உருட்டிவிளையாடுகின்றனர்.
 
நுண்கலைத்துறை கவனிக்கப்படவேண்டும்!
எனவே இனிமேல் ஆசிரியர் ஆட்சேர்ப்பின்போது நுண்கலைத்துறையையும் இணைத்து விண்ணப்பம் கோரவேண்டும்.இல்லாவிட்டால் இந்தக் கற்கை நெறிகளை நீக்கிவிடுங்கள். எதிர்கா சந்ததியாவது இவற்றைத்தவிர்த்து பாடங்களைத் தெரிவுசெய்யட்டும். அவர்களாவது இப்பேராட்டங்களைத்தவிர்க்கட்டும்.
 
இது தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்காகவே கூறுகின்றேன். இதன்பிறகாவது தமிழர் கலைகள் பாதுகாக்கப்படவேண்டும் புத்துயிர் ஊட்டப்படவேண்டும் என யாராவது மேடைகளில் முழங்காதிருக்கட்டும்.
ஒரு தடவை முதலமைச்சரைச்சந்தித்தபோது உங்களுக்கு என்னதொழில் தர? என்று கேட்டார். நாம் கற்றது இப்படியான கேள்விகளை அவமானத்துடன் தாங்கவா? தொழிலுக்கு இக்கற்கை லாயக்கில்லாவிட்டால் இதனை நீக்கிவிடுங்கள் என்பதே எமது வேண;டுகோள்.
 
சாகும்வரை போராட்டம்!
எனவே வரும் பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பில் நுண்கலைத்துறையைக் கவனமெடுக்கவேண்டும்.இன்றேல் வடக்கு கிழக்கிலுள்ள 700 வேலையில்லா நுண்கலைத்துறைப்பட்டதாரிகள் தனியான சாகும்வரையிலான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிவரும் என்றார்.amparai-a amparai-b amparai-c