வட்டுவாகல் பகுதியிலும் காணியை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தில் குதிப்பு

0
311

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்ப்படை சுபீகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைத்து தங்கியுள்ள தமது 617 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி குறித்த பகுதி  மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை  முன்னெடுத்துள்ளனர்.

.பல்வேறு போராட்டங்கள் நடாத்தியும் இந்த காணி  விடிவிப்பு தொடர்பாக  எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லையென தெரிவித்தே இந்த போராட்டம் முன்னேடுக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

தமது வாழ்வாதார வழிகள் அனைத்தும் முடக்கியே இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  மீன்பிடிக்க முடியாது எமது கடைகரை பாதைகள் முடக்கப்பட்டுள்ளன இதனை விட எமது விவசாயக்கானிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு வாழவாதாரமின்றி  பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்

கோத்தபாய கடற்ப்படை முகாம் வாயில் முன்பாக கொட்டகை அமைத்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ள மக்கள் இன்றும் நாளையும்  குறித்த பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாளை மறுதினம் குறித்த பகுதியிலிருந்து மாவட்ட செயலகம்  வரை பேரணியாக சென்று மாவட்ட செயலாளரிடம் மகயர் ஒன்றை கையளித்து பதின்நான்கு நாட்டகள் அவகாசம் வழங்கி அதற்குள் உரிய தீர்வு இல்லையேல் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் vadduvakal-a vadduvakal-b vadduvakal-c