உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்

0
659

kalaiyarasan-aபோராட்ட காலங்களில் தங்களது உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் சுட்டிக்காட்டினார்.

கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகனுடைய நன்கொடை மூலம் எருவிலில் உள்ள மூன்று கழகங்களுக்கும் 40 அடி நீளமான  தகரத்திலாளான கொட்டகை வழங்கியதுடன் கை, கால் இயக்கமின்றி இருக்கும் ஒருவருக்கு கடை வைப்பதற்காக வேண்டி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வானது  கழகத்தலைவர்களின் தலைமையில்  நேற்று எருவில் நூலகத்தில் நடைபெற்றது..

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் எருவில் கண்ணகி வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் கிராமத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,கண்ணகி வித்தியாலய பழைய மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் மூன்று கழகங்களையும் உடைய உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

கனடா நாட்டில் இருந்து கொண்டு இன்று இந்த உதவியினை செய்யும் முருகேசு விசாகன் அம்பாறை மாவட்டத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை செய்திருக்கின்றார் அங்கு 6 தமிழ் குடும்பங்கள் இருப்பதற்கு இருப்பிடம் இன்றி தவித்தபோது அதனை எமது ஆசிரியர் ஆர்.தில்லைநாயகம் ஊடகங்களில் வெளிக்கொண்டுவந்திருந்தார் (குறிப்பாக சுபீட்சம் இணையத்தளத்தில்) அதனை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் அவர்களுக்கான இருப்பிடங்களை அமைப்பதற்கு மு.விசாகன்  வழிவகைகளை செய்து கொடுத்திருந்தார்.

இவ்வாரான பணிகளை ஊடகவியலாளர் தில்லைநாகம் செய்துகொண்டிருக்கையில் அவரும் பல அச்சுருத்தல்களுக்கு ஆளாகி இருந்ததோடு அவரது வீடும் சூரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாங்கள் முகங்கொடுத்திருக்கின்றோம்.

எமது சமூகம் ஏனைய சமூகங்களிடம் அடிமைகளாக இருந்து வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது இதில் இருந்து முற்றாக விடுதலை பெறவேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தேசத்தில் உள்ள புலம்பெயர் மக்கள், தனவந்தர்கள் இங்கு பல உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.

அவ்வாறு அவர்கள் முன்வரும் பட்சத்தில் எமது மக்கள் நிம்மதியான ஒரு பொருளாதாரத்துடன் கூடிய வாழ்க்கையை ஓரளவிற்காகவது வாழ முடியும் குறிப்பாக இந்தப்பிரதேசங்களை பொறுத்தவரையில் பல தேவைகள் இருக்கின்றது அந்த தேவைகள் முற்றுமுழுதாக நிறைவேற்றப்படவேண்டும் அவ்வாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்

1960 ஆம் ஆண்டிற்கு முன்னர் அம்பாறை மாவட்டமும், மட்டக்களப்பு மாவட்டமும் ஒன்றாக இணைந்திருந்தது ஆனால் பேரினவாதிகளின் சதி வலையின் மூலம் பின்னர் தனித்தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது அதன்காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் மூன்றாவது இனமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஏனைய சமூகங்களின் நெருக்குவாரங்களுக்கு ஆளாகிக்கொண்டு எதையும் செய்யமுடியாத நிலையில் பல பிரச்சனைகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு சூழல்த்தான் தொடர்ந்து கொண்டு வருகின்றது இன்றும் கூட பொத்துவில் பிரதேசத்தில் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு கால். கை இழந்தவர்களுக்கு கூட இந்த அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நாட்டிலே நடைபெற்ற ஜநனாயக ரீதியான போராட்டமென்றாலும் சரி, ஆயுதரீதியான போராட்டமாக இருந்தாலும் சரி இவை அனைத்தும் இடம்பெற்றமைக்கான காரணம் எமது மக்கள் இந்த மண்ணிலே நிலையாக வாழ வேண்டும் என்பதற்காகவும், ஏனைய சமூகங்களுடன் சம அந்தஸ்த்தினை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவேண்டியே இவ்வாரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த சிந்தனைகளை எதிர் கால இளைஞர்கள் கருத்தில் கொண்டு உங்களது பிரதேசங்களில் சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் குறுகிய நேரத்தில் இந்த கழகங்களினது செயற்பாடுகளை அவதானித்திருந்தேன் மிகவும் சிறப்பானமுறையில் அமைந்திருந்தது உங்களது கழகங்கள் போன்று ஏனைய கிராமங்களிலும் கழகங்கள் உருவாகி மக்களது பணியில் முன்னின்று உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.