மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி

0
682

(படுவான் பாலகன்) மீphotos (5)தொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று(18) அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு 57வது நாளாகவும் தமக்கான நியமனத்தினை வழங்ககோரி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் உயிரழந்தவர்களின் ஆத்மாசாந்தியடைய அஞ்சலியை செலுத்தினர்.

சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி, உயிர்நீத்தவர்களுக்காக அகவணக்கத்தினையும், போராட்டம் இடம்பெறும் இடத்தின் முன்னால் செலுத்தினர்.

தமக்கான நியமனத்தினை கோரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் இரத்ததான நிகழ்வையும் நடாத்தி தமது குருதிகளையும் கொடையாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

photos (4) photos (1) photos (2) photos (3)