மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம்

0
1004

poovathy amma-aஇந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் நாளை புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது..

நாளை புதன்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கல்லடி நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறை அருகில் இந்த நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுசெய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.;யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நினைவுதின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை ரீதியான போராட்டம் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவராக அன்னை பூபதி விளங்கிவருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை அவற்றினை பல்வேறு தரப்பினர் அனுஸ்டிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.