கனடாவில் வாழும்முருகேசு விஸ்வநாதன்மூலம் எருவில் கிராமத்திற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு

0
862

கனடாவில்  வாழும் ஒருவரின் மூலம் எருவில் கிராமத்தில் உள்ள மூன்று கழகங்களுக்கும், வாழ்வாதார உதவியினை பெறும் ஒருவருக்குமான நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை எருவில் நூலகத்தில் நடைபெற்றது..

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் எருவில் கண்ணகி வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் கிராமத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பினர் மூன்று கழகங்களையும் உடைய உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொருட்களை கையளிக்கும் நிகழ்வானது மூன்று கழகங்களையும் உடைய தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பினை சேர்ந்தவரும்  தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான முருகேசு விஸ்வநாதன் அவர்களுடன் ஊடகவியளாலர் ஆர்.தில்லைநாயகம் அவர்கள் தொடர்பு கொண்டு எருவில் கிராமத்தின் நிலை தொடர்பாக எடுத்து கூறியபோது முதல் கட்டமாக எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கிழகம் ஆகிய மூன்று கழக்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில் 40 அடி நீளமான தகரத்திளாலான கொட்கை ஒன்றினை மக்கள் நலன் சார்ந்து வழங்கியதோடு கை கால் செயற்படாமல் இருக்கும் ஒருவருக்கு துவிச்சக்கர பொருட்கள் அடங்கிய கடை ஒன்றினை வைப்பதற்கான நிதியுதவியினையும் வழங்கி வைத்தார்eruvil-a eruvil-b eruvil-c eruvil-d