மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயில் மீது கல் வீச்சு

0
756

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி திங்கட்கிழமை (17)  பயணித்த மீனகயா என்ற ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பயணி ஒருவர் சிறு காயமடைந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மட்டக்களப்பு, திராய்மடுப் பகுதியிலேயே  இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த ரயில்  சில நிமிடங்கள் அவ்விடத்தில் தாமதமதித்துப் பின்னர் கொழும்பு நோக்கிப்  புறப்பட்டுச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.