தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில்

0
761

poovathi-aதியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை நாளை (19) மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்..

மட்டக்களப்பு வொஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நடைபெறும் நிகழ்வுக்கான முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முதன்முதலாக அன்னை பூபதியின் 29ம் ஆண்டு நிகழ்வை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இவ்வாறான நினைவு தினங்களை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும்.

தமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சைவழியான போராட்டமாக மாற்றியவர் அன்னையவர்கள். கடந்த 10 வருடங்களாக அன்னை பூபதியின் நினைவு தினத்தினை யாரும் அனுஸ்டிக்கவில்லை.

மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டத்திலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் அழைப்பு விடுப்பதுடன் நடைபெறுகின்ற நினைவு தின நிகழ்வுக்கு அனைவரையும் ஜனநாயகப் போராளிகள் கட்சி அழைக்கின்றனர் என தெரிவித்தார்.