சந்தோசமாக இருந்த மக்களின் உயிரைப் பலியெடுத்த அரச நிருவாகம்

0
582

நல்லாட்சி என சொல்லப்படுகின்றதான ஆட்சியாளர்களின் சீர்; கெட்ட நிருவாகத்தின் சீர்கேடு காரணமாக 30 மனித உயிர்களை பலியெடுக்கும் நிலமைக்கு மீதோட்டமுல்ல  குப்பை   மேட்டு விபகாரம் உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

நேற்று (17) இரவு ஏறாவூர் 5ம் குறிச்சி சக்ஸஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை வருடப் பிறப்பு விழாவின்போது இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக குறித்த மீதோட்டமுல்ல மக்கள் வீதிக்கு இறங்கி பல தடைவை ஆர்ப்பாட்டங்கள், உரிய அதிகாரிகளுக்கு மகஜர், அரசுக்கு அழுத்தம் போன்ற பல்வேறுபட்ட முறைகளை கையாண்ட போதும் அவ் மக்களுக்கு தீர்;வினை கடந்த அரசாங்கம் தொடக்கம் நல்லாட்சி என்ற அரசும் எவ்விதமான தீர்;வினையும் பெற்றுக் கொடுக்காத நிலையில் தற்போது 23 தொடக்கம் 30 வரையான அப்பாவி மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடுமுழுவதும் பல்வேறு மகிழ்ச்சியான கனவுகளுடன் குடும்பமும் சுற்றமும் என ஒன்றுகூடி தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு சில மணித்தியாலங்களில் அப்பாவி மக்களின் அவலக்குரல் ஊரெங்கும் ஒலித்த கொடூர சம்பவம் இதற்கெல்லாம் காரணம் சீர்; கெட்ட அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கு.

இலங்கையில் எந்த விடயம் மக்களுக்கு எதிரான நடந்தாலும் மக்களின் உயிர் பலி நடைபெற்ற பிறகுதான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல இடங்களில் பல பிரச்சினைகளுக்கு வாக்குறுதி அளித்துவரும் நிலையில் மீதோட்டமுல்ல மக்களின் குப்பைமேட்டுப் பிரச்சினைக்கும் அவ்வாறான உத்தேச நாடகத்தைதான் உறுதிபட தெரிவித்துள்ளார்கள் என தெரிவித்தார்.viyalendran-b sports-a