விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

0
320

இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஏறாவூர் வாளியப்பா தைக்கா வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான எம்.எச். முஹம்மட் முஸம்மில் (வயது 44) என்பவர், ஸ்தலத்திலே பலியானதாக, அளவ்வை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரில் இருந்து புறப்பட்டு, கொழும்பு செல்லும் வழியில், அளவ்வை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன், முச்சக்கர வண்டி மோதியதில், இந்த விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணம் செய்த ஏறாவூர் காதியார் வீதியைச் சேர்ந்த முஹம்மட் நழீம், முஹம்மட் உவைஸ், உவைஸின் மனைவி ஆகியோர் காயங்களுக்குள்ளாகி, குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக, வறகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.