கடலில் மூழ்கிய மாணவனை காணவில்லை

0
349

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நீராடிக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த  வீரசிங்கம் தர்மதன் (வயது 17) என்ற மாணவன்,  தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலில் நீராடியுள்ளான். அப்போது திடீரென்று இம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இம்மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில்  7 ஏ மற்றும் 2 பி  பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..