அக்கரைப்பற்றில் சடலம் மீட்பு

0
416

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சடலமொன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி சிவசம்பு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை (16) காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், மாலையாகியும் வீடு திரும்பாமையால்  அவரைத் தேடியதாகவும் அதன்போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்..