கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வு

0
553

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையின் சித்திரைப்புத்தாண்டிற்கான கொடுக்கல் வாங்கல் நிகழ்வு இன்று(17) திங்கட்கிழமை இடம்பெற்றது.

முதல் வைப்பினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினர் தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது பணம் வைப்பிலிட்டவர்களுக்கு. அவர்களின் பணத்தொகைக்கு ஏற்ப பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வங்கிக்கு வருகைதந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு கைவிசேடமும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

கொடுக்கல் வாங்கல் நிகழ்வில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.