முனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

0
723

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் உள்ள துளி அருவி அமைப்பின் 6வது ஆண்டு நிறைவினையும், சித்திரைப்புத்தாண்டினையும் சிறப்பித்து பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றது.

முனைக்காடு பிரதான சந்தியிலிருந்து மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு, முனைக்காடு கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா ஆகிய கிராமங்கள் ஊடாக வருகைதந்து பிரதான சந்தியில் போட்டி நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் வழக்குமரம் ஏறுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், சமனிலையோட்டம், கிடுகு பின்னுதல், ஊசியில் நூல் கோர்த்தல், பின்னோக்கி ஓடுதல், மீட்டாய் ஓட்டம், பணிஸ் உண்ணுதல், மாவூதி காசெடுத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் பங்கேற்று முதல் இரு இடங்களையும் பெற்றவர்களுக்கு, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன..