“ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும்” த.தே.கூ திட்டவட்டம்

0
414

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விபரங்கள் கையளிக்கப்பட்டு அவற்றை விடுவிப்பது குறித்து உரிய பதிலொன்றை பெற்றுக்கொள்வுள்ளடதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினரின் பிடியில் உள்ள காணிகளை மீளவும் அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பது குறித்த முக்கிய பேச்சுவார்த்தையொன்று நாளை 11மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகளும், முப்படையின் தளபதிகளும் பங்கேற்கவுள்ள அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பங்கேற்கவுள்ளது.

tx

virakesari