திகிலிவெட்டையில் நடைபெற்ற சித்திரைக் கொண்டாட்டம்

0
444
திகிலிவெட்டையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு முன்பள்ளியில் சிறுவர்களுக்கான புது வருட நிகழ்வுகள்  Future Mind அமைப்பின் தலைவர் மணி.ரஞ்ஜன் மற்றும் உப செயலாளர் அ. ஜெயஜீவிதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில்  Future Mind ஐ சேர்ந்த பொருளாளர் தி.தேவகானந் , கொள்வனவாளர் பொ. சிவகுரு மற்றும் ந. நவநீதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும்  கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.சின்னத்தம்பி , திகிலிவெட்டை ஸ்ரீ மஹா விஷ்ணு முன்பள்ளி ஆசிரியர் த.தவலெட்சுமி , குளத்துவெட்டை ஆத்தியடி விநாயகர் முன்பள்ளி ஆசிரியர்களான த. கோகுலவேணி , ந. புஸ்பராணி மற்றும் பெற்றோர்கள்  வருகை தந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வாக மாணவர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து பலூன் ஊதுதல் , தாரா ஓட்டம் , கயிறிழுத்தல் , மிட்டாய் ஓட்டம் , கரண்டியில் தேசிக்காய் வைத்து ஓடுதல் , ஊசியில் நூல் கோர்த்தல் , போத்தலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன.
இதில் முன்பள்ளி மாணவர்களும் , தரம் 5 க்கு உட்பட்ட மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விளையாட்டுகளில் பங்கு பற்றியதோடு பாடசாலை உபகரணங்களை பரிசில்களாக பெற்றுக்கொண்டனர்.
unnamed unnamed (1) unnamed (2)